Paristamil Navigation Paristamil advert login

இந்த பெயருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா? - ஆச்சரிய தகவல்!!

இந்த பெயருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா? - ஆச்சரிய தகவல்!!

1 மாசி 2017 புதன் 10:30 | பார்வைகள் : 19688


ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் இருக்கும்... கந்தையா, சுப்பிரமணியம், மாணிக்கவாசம் இது போன்ற பெயர்களை எங்கள் தாய்நாட்டில் கேட்கலாம்.. Jean, Phillipe, Thierry... இதுபோன்ற பெயர்களை பிரெஞ்சு தேசத்தில் அடிக்கடி கேட்கலாம்!! அதே போல் பெயர்களை வைத்து குறித்த பெயருடைய நபர் எந்த ஆண்டுகளில் பிறந்திருப்பார் என்பதை ஒரு யூகமாக கணிக்கலாம்!! ஒவ்வொரு காலங்களிலும் விதவித பெயர்களை சூட்டுவதால் அதுபோன்று கணிக்க கூடியதாக இருக்கும். 
 
சரி.. இன்று பிரெஞ்சு புதினத்தில் 90 களில் பிரபலமடைந்த பெயர் குறித்து பார்க்கலாம்... 1988, 1989, 1990 ஆண்டுகளில் பிரான்சில் அதிகம் சூட்டப்படும் பெயர்களில் Jean பெயர் அதிகமாக இருந்தது. தனியே Jean அல்லது, Jean சேர்ந்து வேறு ஏதேனும் பெயர்கள்... ஆனால், 1990 ஆம் ஆண்டுவரை பிரெஞ்சு தேசம் கேள்விப்படவே இல்லாத ஒரு பெயர் தான் பின்னாட்களில் 'வைரல்' ஆனது!! அந்த பெயர் "Kévin" !!
 
இந்த பெயர் எப்படி பிரான்சை வந்தடைந்தது என்பது குறித்து யூகமான கருத்துக்களே உள்ளன... திரைப்படங்களில் இருந்து வந்திருக்கலாம்.. '90 களில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான 'Dancing with Wolves’ திரைப்படத்தில் நடித்த Kevin Costner மிக வரவேற்புக்கு உள்ளானார். பலருக்கு பிடித்த நபராக மாறினார்... அதே வருடத்தில் Home Alone’ திரைப்படம் வந்து வெற்றி பெற்றது. அதில் நடித்த குழந்தையின் பெயர் (திரைப்படத்தில்) "Kevin McCallister" அதன் பின்னர் தான் இந்த Kévin எனும் பெயர் விஸ்வரூபம் எடுத்தது. 
 
திரைப்படத்தின் தாக்கத்தில் இருந்து வந்தது எனும் கூற்றை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்றாலும்... அதுவரை பிரெஞ்சு தேசம் கேள்விப்பட்டிருக்காத பெயர் என்பதால் இப்படி சொல்லலாம்!! சரி.. விஷயத்துக்கு வருவோம்.. 1991 ஆம் ஆண்டு மட்டும் 14,087 குழந்தைகளுக்கு Kévin என பெயர் சூட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கிறது ஆய்வு!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்