அவதானம் : இன்று முதல் பிரித்தானியாவுக்குச் செல்ல இலத்திரனியல் விசா!!

1 சித்திரை 2025 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 2614
பிரான்சில் இருந்து பிரித்தானியா செல்ல இன்று ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இலத்திரனியல் விசா எனும் அனுமதி கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களது கடவுச்சீட்டுடன் இந்த மின்ணனு அனுமதி விசாவையும் (ETA) இணைக்கவேண்டும். இதனை ஒருதடவை பெற்றுக்கொண்டால், இரண்டு வருடங்களுக்கு அது செல்லுபடியாகும். இதனை பெற்றுக்குள்ள பிரித்தானியாவின் அரச இணையத்தளத்திலோ அல்லது தொலைபேசி செயலி ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
12 யூரோக்கள் செலுத்தப்பட்டு இந்த இலத்திரணியல் விசாவை பெற்றுக்கொள்ள முடியும். இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.