Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது…? சுனிதா வில்லியம்ஸின் பதில்

விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது…? சுனிதா வில்லியம்ஸின் பதில்

1 சித்திரை 2025 செவ்வாய் 09:20 | பார்வைகள் : 194


சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்கள் செலவிட்டபின் பூமிக்குத் திரும்பியுள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா விலியம்ஸிடம் இந்திய ஊடகவியலாளர்கள் விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது என்று கேட்டார்கள்.   

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதா என சுனிதா வில்லியம்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அத்துடன், விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இரண்டாவது கேள்விக்கு நான் முதலில் பதிலளிக்க விரும்புகிறேன் என்று கூறிய சுனிதா, விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா அற்புதமாகக் காட்சியளிக்கிறது என்றார்.

ஒவ்வொரு முறை இமய மலைக்கு மேலாக பயணிக்கும்போதும் அருமையான காட்சிகளைக் காணமுடிந்தது.

ஒரு அலை இந்தியாவுக்குள் பாய்வது போல, பல வண்ணங்களுடன், அதுவும் கிழக்கிலிருந்து குஜராத் மற்றும் மும்பையை நோக்கி போகும்போது, கடற்கரையில் நிற்கும் மீன்பிடி படகுகளைக் காணமுடிகிறது.

இரவில் தெரியும் மின்விளக்குகளின் வலைப்பின்னல், பெரிய நகரங்களிலிருந்து சிறிய நகரங்கள், பகலில் இந்தியாவின் கீழ் நோக்கிச் செல்வதுபோல் தோன்றும் இமயமலை என எல்லாமே அற்புதமாக காட்சியளித்தன என்கிறார் சுனிதா.

முதல் கேள்விக்கான சுனிதாவின் பதில், இந்தியா தலைசிறந்த ஒரு நாடு, அற்புதமான ஜனநாயக நாடு, இந்தியா விண்வெளியில் கால்பதிக்க முயற்சித்துவரும் நிலையில், அதில் ஒரு பாகமாக இருந்து இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன் என்பதாகும்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்