Paristamil Navigation Paristamil advert login

‘ஜனநாயகன்’ படத்தின் கதை இதுவா ?

‘ஜனநாயகன்’ படத்தின் கதை இதுவா ?

1 சித்திரை 2025 செவ்வாய் 09:57 | பார்வைகள் : 1302


விஜயின் 69 ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். இதில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படமானது அரசியல் கதைக்களத்தில் உருவாகி வருவதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தது.

அதன்படி இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர்களும் அதை உறுதி செய்து இருக்கின்றன. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்புகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆகையினால் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது ஒவ்வொரு குடிமகனின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் தேர்தலில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும் எடுத்துரைக்கும் திரைப்படம் தான் ஜனநாயகன் என்று சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் தற்போது மிக தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருவதால் இந்த படத்தில் புரட்சிகரமான வசனங்களும் இடம் பெற்று இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜய், சர்கார் படத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை கூறியிருந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஜனநாயகன் படத்தின் மூலமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்