இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக முட்டைகளுக்கு வற் வரி
1 சித்திரை 2025 செவ்வாய் 10:04 | பார்வைகள் : 7954
இன்று முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று சங்கத்தின் செயலாளர் கூறினார்.
வரலாற்றில் முட்டைகளுக்கு வற் வரி அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
முட்டைகள் மீது வற் வரியை அமல்படுத்துவது நியாயமற்றது என்றும், முட்டைத் தொழிலின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் சங்கத்தின் செயலாளர் மேலும் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan