புதிய மாதம்.. புதிய மாற்றங்கள்!

1 சித்திரை 2025 செவ்வாய் 10:09 | பார்வைகள் : 3466
இன்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை புதிய மாதத்தில் நாடு பல்வேறு சட்டதிட்ட மாற்றங்களைச் சந்திக்கிறது. அவை தொடர்பில் தொகுத்து தருகிறது இந்த பதிவு.
■ revenu de solidarité active!!
சமூகநலக் கொடுப்பனவு (revenu de solidarité active) 1.7% சதவீதத்தால் அதிகரிப்புக்கு உள்ளாகிறது. வீட்டுக்கொடுப்பனவு இல்லாமல் € 1,334.98 யூரோக்கள் பெற்றுக்கொண்டிருந்த குடும்பத்தினர் € 1,357.70 யூரோக்களாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுகிறது. இன்று ஏப்ரல் 1, 2025 செவ்வாய்க்கிழமை முதல் இந்த கொடுப்பனவு அதிகரிக்கிறது.
■ சுகயீன விடுமுறைக்கான ஊதியம்!!
சுகயீன விடுமுறைக்காக வழங்கப்பட்டு வந்த ஊதியம் குறைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 முதல், சுகயீன விடுமுறைக்கான ஊதியம் அடிப்படைச் சம்பளத்தில் 1.4 மடங்கினால் வழங்கப்படும். முன்னதாக இந்த தொகை 1.8 மடங்கினால் வழங்கப்பட்டு வந்தது.
■ terrasses!!
ஒவ்வொரு ஆண்டின் கோடைகாலத்தின் போதும் நடைமுறைக்கு வரும், உணவக முற்றங்கள் அல்லது மொட்டை மாடிகள் (terrasses) இவ்வருடத்தில் இன்று ஏப்ரல் 1 முதல் அனுமதிக்கப்படுகிறது.
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, பதிவு மேற்கொண்டு உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள், அருந்தகங்களில் முற்றங்களை அமைக்க முடியும். ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை இந்த அனுமதி வழங்கப்படுகிறது. அதேவேளை, ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த முற்றங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
■ l'Allocation aux adultes handicapés!!
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (l'Allocation aux adultes handicapés - AAH) இன்று முதல் அதிகரிக்கிறது. €1,016.05 இல் இருந்து €1,033.32 யூரோக்களாக இந்த தொகை அதிகரிக்கப்படுகிறது. இது 1.7% சதவீதம் அதிகரிப்பாகும்.