மலேசியாவில் எரிவாயு குழாய் தீப்பிடித்ததில் 33 பேர் காயம்

1 சித்திரை 2025 செவ்வாய் 10:18 | பார்வைகள் : 525
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 01 எரிவாயு குழாய் தீப்பிடித்ததில் 33 பேர் காயமடைந்துள்ளார்கள்.
காயமடைந்தவர்களில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டு மூன்று மணித்தியாலங்கள் கடந்தும் தீ எரிவதாதோடு, அப்பகுதியூடான போக்குவரத்திற்கு மலேசிய பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.
தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடந்து நடைபெற்று வருகின்றன.
கம்போங் கோலா சுங்கை பாருவில் வீடுகளில் மக்கள் சிக்கியுள்ளதாகவும், மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சிலாங்கூர் அனர்த்த முகாமைத்துவ குழுத் தலைவர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.
தீ விபத்தால் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.