Paristamil Navigation Paristamil advert login

ஒளிப்பட கருவியுள்ள தொலைபேசியை உருவாக்கிய பிரெஞ்சு தேசம்!!

ஒளிப்பட கருவியுள்ள தொலைபேசியை உருவாக்கிய பிரெஞ்சு தேசம்!!

24 தை 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18859


இன்று கையடக்க தொலைபேசிகள் வாங்கும் போதெல்லாம் முதலில் கவனிப்பது, 'ஒளிப்பட கருவி'யின் தரம் குறித்து தான். ஒளிப்பட கருவி இல்லாமல் தொலைபேசியே இல்லை... இதன் முன்னோடி நமது பிரெஞ்சு தேசம் என்றால்... நிச்சயம் ஆச்சரியம் தான் இல்லையா??!! 
 
அவர் பெயர் Philippe Kahn. இவருக்கு கணிதவியலாளர், ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர் என அடையாளங்கள் நிறைய உண்டு. சொந்தமாக நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கினார். தொலைபேசிகளுக்கான இயங்குதளங்கள் பலவற்றை உருவாக்கினார். இவர் கண்டுபிடித்த இயங்கு தளத்தை சில வருடங்கள் 'மோட்டோரோலா' நிறுவனம் பயன்படுத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக Philippe Kahn கண்டு பிடித்தது தான் 'கமரா தொலைபேசி' 
 
தொலைபேசியின் தேவை அதிகமாக பரவி, அத்தியாவசிய பொருளாக மாறிக்கொண்டிருந்த 1997 ஆம் ஆண்டுப்பகுதி அது. QVGA என அழைக்கப்படும் ஒளிப்படகருவி (தரத்தில் மிக குறைந்தது. 1 மெகா பிக்சலுக்கும் குறைவானது.  4:3  - 320 x 240 Pi) ஒன்றினை தொலைபேசியில் பொருத்தி வெற்றி கண்டார். 
 
ஒரு இஞ்ச் அகலம் உள்ள திரையில் புகைப்படம் பிடிக்கலாம்.. அதை மற்றவருடன் பகிரலாம் என்பது அப்போது மிக ஆச்சரியமான ஒன்று. அதை தொடர்ந்து விறு விறுவென இந்த கண்டுபிடிப்புக்கள் வளர்ச்சி கண்டது. 
 
இப்போது தொகைபேசிகளில் 4K (3840 pixels × 2160 lines) தரம் வரை கமரா தரம் வளர்ச்சி கண்டாலும், அதன் முன்னோடி பிரான்ஸ் என்பது பெருமையான விஷயம்தானே??!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்