இயற்கை குடும்பத்தின் 'சரணாலயம்' - பிரித்தானிய இளவரசி

1 சித்திரை 2025 செவ்வாய் 10:22 | பார்வைகள் : 855
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் இயற்கை குடும்பத்தின் 'சரணாலயம்' எனத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 30 ஆம் திகதி பிரித்தானியாவில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், பிரித்தானியா இளவரசி கேட் மிடில்டன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.
அதில், தனது குடும்ப வாழ்க்கையில் இயற்கையின் பங்களிப்பு தொடர்பில் கூறியுள்ளார். அத்துடன், இயற்கை என்பது குடும்பத்தின் 'சரணாலயம்' என்பதை அவர் பிரதிபலித்துள்ளார், மேலும் 'இயற்கை உலகத்துடனான நமது பிணைப்பின்' முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அவரின் வாழ்த்துச் செய்தி வீடியோவில் பிரதானமாக பிரித்தானியா முழுவதும் உள்ள பல்வேறு இயற்கை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த வருடம் கோடை காலத்தில் நோர்போக்கில் இளவரசர் வில்லியம் நாய்களுடன் நடந்து செல்வது, ஒரு மரத்தைத் தொடும் அவரது கைகளின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஒரு வருட காலமாக இயற்கை எங்கள் சரணாலயமாக இருந்து வருகிறது. "இந்த அன்னையர் தினத்தில், இயற்கையுடனான எமது பிணைப்பு எமது உள்ளுணர்வை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையின் வளமான திரைச்சீலைக்குள் நாம் வகிக்கும் பங்கையும் எமக்கு நினைவூட்டுகிறது என்பதை அங்கீகரிப்பதற்கு இயற்கை அன்னையைப் போற்றுவோம் " என தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைக்குப் பின்னர் தான் குணமடைந்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் இளவரசி கேட் மிடில்டன் அறிவித்தார்.
இதனை தொடர்ந்தே அன்னையர் தின வாழ்த்துச் செய்தியை அவரிடம் இருந்து வந்துள்ளது.
தனது உடல்நலப் பிரச்சினையால் போராடிய காலங்களில் இயற்கையூடாக தான் அடைந்த ஆறுதலைப் பற்றி அவர் அடிக்கடி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.