Paristamil Navigation Paristamil advert login

வெஜிடபிள் குருமா

வெஜிடபிள் குருமா

1 சித்திரை 2025 செவ்வாய் 10:12 | பார்வைகள் : 400


தேவையானப் பொருட்கள்: - பச்சை பட்டாணி - 1 கப் - சௌசௌ - 1 - கேரட் - 2 - பீன்ஸ் - 10 - உருளைக்கிழங்கு - 2 (சிறியது) - தேங்காய் - ½ மூடி - முந்திரி - 6 - கசகசா - 1 டீ ஸ்பூன் - பட்டை - 1 - கிராம்பு - 3 - ஏலக்காய் - 2 - பிரியாணி இலை - 1 - பச்சை மிளகாய் - 2 - பெரிய வெங்காயம் - 2 (சிறியது) - தக்காளி - 3 (சிறியது) - இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன் - எண்ணெய் - தேவையான அளவு - நெய் - 1 டீ ஸ்பூன் - கொத்தமல்லித்தூள் - 2 டீ ஸ்பூன் - மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன் - மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன் - கரம் மசாலா - 1 டீ ஸ்பூன் - புளிப்பில்லாத தயிர் - ¼ கப் - உப்பு - தேவையான அளவு - பால் - ½ கப் - கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி 

செய்முறை: - 

பாலை காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும். 

சௌசௌ, கேரட், பீன்ஸ், மற்றும் உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்கவும். - அதனுடன் நறுக்கிய காய்கறிகள் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும் விசில் தானாக அடங்கும் வரை காத்திருக்கவும். 

வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். - தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும். - மிக்ஸி ஜாரில் கசகசா, முந்திரி பருப்பு மற்றும் தேங்காயை சேர்க்கவும். - அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். 

குக்கரை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும். - எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பொரிய விடவும். 

அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். - அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 

அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். 

 வேக வைத்த காய்கறிகளை தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறவும். 

பின் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு விடவும். 

தயிரை நன்றாக அடித்து சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். 

அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 
 கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான  வெஜ் குருமா ரெடி!

Read more at: https://tamil.boldsky.com/recipes/saravana-bhavan-vegetable-kurma-recipe-how-to-prepare-saravana-bhavan-vegetable-kurma/?story=2

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்