பாதிக்கப்படும் திருநங்கை இளைஞர்களுக்கு தங்குமிடம்!!

1 சித்திரை 2025 செவ்வாய் 13:54 | பார்வைகள் : 3385
வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம் நேற்று மார்ச் 31, திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் திருநங்கை சிறுவர்கள், திருநங்கை இளைஞர்களுக்கு தங்குமிடமும், அவர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுக்க இந்த நிலையம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் 18 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட ஆறு திருநங்கை இளைஞர்கள் அவ்வாறு இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.