Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் அதிக குளிர் நிலவும் கிராமம்! - ஒரு ஆச்சரிய தகவல்!!

பிரான்சில் அதிக குளிர் நிலவும் கிராமம்! - ஒரு ஆச்சரிய தகவல்!!

20 தை 2017 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18189


இப்போது ஐரோப்பாவின் குளிரும் ஜல்லிக்கட்டும் தானே 'ட்ரெண்ட்'? ஜல்லிக்கட்டுக்கும் பிரெஞ்சுக்கும் சம்மந்தம் இல்லை... ஆனால் குளிருக்கும் பிரான்சுக்கும் ஏக போக 'கனெக்‌ஷன்' உண்டு!! இன்று பிரான்சில் அதிக குளிர் நிலவும் ஒரு கிராமம் குறித்த ஆச்சரிய தகவல் பார்க்கலாம்!! 
 
"Mouthe" இப்படி ஒரு கிராமத்தின் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!  கிழக்கு பிரான்சில் உள்ள ஜூரா மலைக்கு அருகே உள்ள ஒரு மலையடிவார கிராமம். மிகச் சொற்பமான எண்ணிக்கையில் மக்களை கொண்ட (ஆயிரத்துக்கும் குறைவு) இந்த கிராமமே பிரான்சில் அதிக குளிர் நிலவும் உத்தியோகபூர்வ நகரம் அல்லது கிராமம். தற்போது அங்கு -6 செல்சியஸ் வரை குளிர் நிலவினாலும். இன்னும் சில நாட்களில் -20 செல்சியஸ் வரை குளிர ஆரம்பித்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
-20 ஆ?? என ஆச்சரியமா இருக்கிறதா?? இதென்ன பிரம்மாதம்.. 1985 ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் இங்கு  -41.2C  குளிர் பதிவாகியுள்ளது. இதனாலேயே இது 'குட்டி சைபீரியா!' என அழைக்கப்படுகிறது. அப்பப்பா..!! இந்த ஊரில் உள்ள ஆறு ஒன்று உறைந்து ஆற்றின் மேல் நடக்கூடியதாக உள்ளது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான்!!
 
சரி.. இங்கு ஏன் இவ்வளவு குளிர்?? இது மற்ற கிராமங்களைக் காட்டிலும் தரையில் இருந்து 930 மீட்டர்கள் உயரத்தில் (altitude) உள்ளது. மேலும் இரண்டு உயர மலைகளுக்கு இடையே இந்த கிராமம் இருப்பதால் குளிர் ஆட்டிப்படைக்கிறது?? 
 
தற்போது நீங்கள் வசிக்கும் பகுதியில் குளிர் போதவில்லை என்றால் ஒருதடவை இந்த கிராமத்துக்குச் சென்று வாருங்களேன்..!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்