Paristamil Navigation Paristamil advert login

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை... புதிய தரவு!!!

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை... புதிய தரவு!!!

1 சித்திரை 2025 செவ்வாய் 19:06 | பார்வைகள் : 1261


பிரான்சில் உள்ள சிறைக்கைதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படுகிறமை அறிந்ததே. மார்ச் 1 ஆம் திகதி தரவுகளின் படி பிரான்சில் 82,152 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு சிறைச்சாலைகளில் 62, 539 கைதிகளுக்கான இடம் மாத்திரமே உள்ள நிலையில், கடந்த பல வருடங்களாக கைதிகளின் எண்ணிக்கை கொள்ளவை விட அதிகமாக காணப்படுகிறது. தற்போது 131.7% சதவீதமாக கைதிகளின் எண்ணிக்கை காணப்படுகிறது.

அதேவேளை, 15 சிறைச்சாலைகளில் 200% சதவீதமாக உள்ளது.

பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 19,000 கைதிகள் வெளிநாட்டவர்களாவர். அவர்களை அவர்களது நாடுகளிலேயே சிறைவைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுவருகிறமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்