Paristamil Navigation Paristamil advert login

திரவுபதி அம்மன் கோவில் திறப்பு: பின்னணியில் சீமான்

திரவுபதி அம்மன் கோவில் திறப்பு: பின்னணியில் சீமான்

2 சித்திரை 2025 புதன் 09:30 | பார்வைகள் : 340


விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவில் திறக்கப்படாததை கண்டித்து, ஆலயப் பிரவேச போராட்டம் நடத்துவுதாக சீமான் அறிவித்ததும், இன்னும் ஒரு வாரத்தில் கோவில் திறக்கப்படும் என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இதன் பின்னணி குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இது ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், பட்டியலின மக்கள் சாமி கும்பிட, மாற்று சமூகத்தினர் அனுமதி மறுத்தனர். இதனால், இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.

கடந்த மாதம், அனைத்து தரப்பினரும், சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 'சீல்' வைக்கப்பட்ட கோவிலை திறக்க, ஹிந்து அறநிலையத்துறை முயற்சிக்கவில்லை. இந்நிலையில், மேல்பாதியில் ஆலய பிரவேசம் போராட்டம் நடத்துவோம் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

ஏனெனில், பட்டியலினத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுகளை குறிவைத்தே, சீமான் போராட்டம் அறிவித்தார். அதை முறியடிக்கும் வகையில், கோவிலை திறந்தால், அரசுக்கும் நல்ல பெயர் ஏற்படும்.

பட்டியலின மக்களின் ஓட்டு வங்கியும் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என, உளவுத்துறை அரசுக்கு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, 'இன்னும் ஒரு வாரத்தில் கோவில் திறக்கப்படும்' என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்