Aulnay-sous-Bois : மகிழுந்து மோதி ஒருவர் பலி... - மூவர் கைது!!

2 சித்திரை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 3974
காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய மகிழுந்து 64 வயதுடைய ஒருவரை மோதித்தள்ளியதில் அவர் பலியாகியுள்ளார். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் மார்ச் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக தப்பி ஓடிய மகிழுந்து ஒன்று பாதசாரி ஒருவரை இடித்து தள்ளியுள்ளது. காயமடைந்த நபர் மாலை 4.50 மணி அளவில் Rue du Docteur-Schalow வீதியில் வைத்து மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனை கொண்டுசென்ற சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முதலாமவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது நபர் காவல்நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025