Paristamil Navigation Paristamil advert login

SFR - தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்! - சில தகவல்கள்!!

SFR - தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்! - சில தகவல்கள்!!

19 தை 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 19313


பிரான்ஸ் தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் உச்சத்தில் உள்ளது. தொலைபேசி அழப்புக்கள், வீடியோ அழைப்புக்கள், 4G இணையத்தள பாவணை, ரோமிங் வசதி என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இதுபோல் பிரான்சில் நான்கு தொலைத் தொடர்பு சேவைகள் உள்ளது. அப்படி ஒரு தொலைத்தொடர்பு வழங்கியான SFR குறித்து இன்று சில முக்கிய தகவல்கள்!!
 
பெப்ரவரி 1987 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று பிரான்ஸ் உட்பட ஐரோப்பாவில் மிக முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக உள்ளது. குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு, இணைய பாவணை உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது. பிரான்ஸ் உட்பட,  Réunion,  Mayotte,  Belgium,  Luxembourg, Guadeloupe,  Martinique ஆகிய நாடுகளிலும் சேவைகள் வழங்கி வருகிறது. 
 
டிசம்பர் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, SFR வழங்குனர்களிடம் 21.9 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் 6.35 மில்லியன் வீடுகளுக்கு அதிவேக இணைய வசதியினையும் வழங்குகிறது. இந்த சேவைகள் கடல் கடந்த பிரெஞ்சு தேசங்களிலும் ( Martinique, Guadeloupe, Guyane) வழங்கப்படுகிறது.
 
SFR சேவை, நெரர்லாந்தைச் சேந்த மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக Alticeக்கு சொந்தமானதாகும். இதுதவிர கடந்த 2001 ஆம் ஆண்டு வரை SFR நிறுவனத்தின் 44 வீதமான பங்குகளை Vodafone நிறுவனம் கொண்டிருந்தது. 
 
SFR நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு €2.472 பில்லியன் இலாபம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தலமைச் செயலகம் பரிசில் உள்ளது. மேலும் இங்கு 14,500 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்!
 
ஆமா..., உங்கள் 'நெட்வொர்க்' எது பாஸ்?
 
 
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்