அடுத்த இலக்கு குறித்து அறிவித்த விராட் கோலி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

2 சித்திரை 2025 புதன் 13:06 | பார்வைகள் : 372
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை ஆகியவற்றை வென்று சாதனை படைத்தது.
2024 டி20 உலகக்கோப்பை வென்றவுடன், சர்வேதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்தனர்.
இதே போல், சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியுடன் இருவரும் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலியிடம் அடுத்த பெரிய இலக்கு என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "அடுத்த பெரிய இலக்கு என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் 2027 உலகக் கோப்பையை வெல்வது பெரிய இலக்காக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், 2027 உலகக்கோப்பையில், விராட் கோலி விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.