Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எல்லை மீறுகிறார்கள்: பாகிஸ்தான் வீரர் கொந்தளிப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எல்லை மீறுகிறார்கள்: பாகிஸ்தான் வீரர் கொந்தளிப்பு

2 சித்திரை 2025 புதன் 13:09 | பார்வைகள் : 330


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், தனிப்பட்ட கருத்துக்களுடன் எல்லை மீறுவதாக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா (Naseem Shah) முன்னாள் வீரர்களை விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், "முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒரு வீரரின் கள முயற்சிகளை விமர்சிப்பது நியாயமானது என்றாலும், தனிப்பட்ட கருத்துக்கள் மிகையாகச் செல்கின்றன. இதுபோன்ற கருத்துக்கள் ஒரு வீரரின் மன உறுதியை பாதிக்கும்.

10-15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிய வீரர்களைப் பொறுத்தவரை, அவர்களின் செயல்திறனைப் பற்றி நீங்கள் விவாதிக்கலாம்.

ஒருவர் எப்படி நன்றாக பந்துவீசவில்லை, நன்றாக துடுப்பாட்ட செய்யவில்லை அல்லது அவர்கள் என்ன தவறுகளைச் செய்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசலாம். அது பரவாயில்லை. எதை மேம்படுத்தலாம் என்பதை நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம்.

இருப்பினும், ஒருவர் தங்கள் தலைமுடியை எப்படி ஸ்டைல் செய்கிறார் அல்லது எப்படி பேசுகிறார் என்பது குறித்து, மிகவும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிப்பது எல்லை மீறுவதாக நான் உணர்கிறேன். இந்த விடயங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கின்றன" என தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்