Paristamil Navigation Paristamil advert login

ஓவியர் Greg - காமிக்ஸ் உலகின் ஜாம்பவான்!!

ஓவியர் Greg - காமிக்ஸ் உலகின் ஜாம்பவான்!!

17 தை 2017 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 19030


உலகில் மிசச்சிறந்த காமிக்ஸ் (சித்திரக்கதை) வெளியீட்டாளர்கள் பிரான்சிலும் பெல்ஜியத்திலும் தான் உள்ளனர். முழுநேர காமிக்ஸ் வெளியீட்டார்கள். ஒவ்வொரு காமிக்ஸ் கதைகளுக்கும் பின்னால் பலநூறு மனிதர்களின் அயராத உழைப்பு உள்ளது. ஒரு காமிக்ஸ் கதை புத்தகமாக பதிப்பாகுவதற்கு 6 மாதங்களில் இருந்து 18 மாதங்கள் வரை ஆகும். இருக்கட்டும். இன்று காமிக்ஸ் உலகின் ஜாம்பவான் 'கார்ட்டூனிஸ்ட்' Greg பற்றி பார்க்கலாம்! 
 
பெல்ஜியத்தில் பிறந்திருந்தாலும் படித்தது வாழ்ந்தது எல்லாமே பரிசில் தான். சிறுவயதில் பென்சில் பிடித்து கோடுகள் போட ஆரம்பித்தவர்... பின்னர் கோடுகளை வளைத்தும் நெளித்தும் உருவங்கள் ஆக்கினார். அது கார்ட்டூன்களாக மாறியது இவரின் சுருக்க வரலாறு.
 
இவர் ஒரு கார்டூனிஸ் என்பது எத்தனை பிரபலமோ... அதே அளவு இவர் கதையாசிரியராகவும் பிரபலமாக இருந்தார். பெல்ஜத்தில் முயன் முறையாக Luc Orient எனும் ஒரு விஞ்ஞான காமிக்ஸ் கதைத்தொடருக்கு Greg கதாசிரியராகபிருந்தார். கதையை எங்கே திருப்ப வேண்டும்.. எங்கே மிரட்ட வேண்டும்... எங்கே முடிக்கவேண்டும் என 'சஸ்பென்சுகளை' சரியாக கையாளத்தெரிந்தவராக மாறினார்.
 
பின்னர் இவரின் சிந்தனையில் உதித்த ஹீரோ தான் ப்ரூனோ பிரேஸில். ஓவியர் வில்லியம் வான்ஸ் ஓவியங்களை வரைய 'முதலைப் பட்டாளம்' என அழைக்கப்படும் இந்த ப்ரூனோ பிரேஸில் கதைத் தொடர்கள் மஹா ஹிட் அடித்தது. பிரெஞ்சு பெல்ஜியம் தாண்டி... எல்லைகளை கடந்து பல்வேறு மொழிகள் பேசினார்கள் இந்த ஹீரோக்கள். (தமிழ் உட்பட)
 
சிக் பில் கதைகளுக்கு ஓவியங்களை வரைந்து தள்ளினார் Greg. பின்னர் The Adventures of Tintin, Alice au pays des merveilles, Clifton, Modeste et Pompon என இவரது சிறந்த படைப்புகள் இன்னமும் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக்கொண்டு தான் உள்ளது.
 
காமிக்ஸ் கதைகளுக்காக ஸ்பெயின் நாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான Haxtur Award இவர் வசம் உள்ளது. காமிக்ஸ் வரலாறு பற்றி குறிப்பெடுத்தால் Greg பெயர் அதில் வராமல் போகாது...!! 
 
தனது 68 வயது வயதில் Greg, ஒக்டோபர் 22, 1999 ஆம் ஆண்டு பரிசில் இறந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்