Paristamil Navigation Paristamil advert login

Vogue - 100 வருடங்களை தொடும் பிரெஞ்சுப் பதிப்பு!

Vogue - 100 வருடங்களை தொடும் பிரெஞ்சுப் பதிப்பு!

14 தை 2017 சனி 10:30 | பார்வைகள் : 18607


இங்கு எல்லாவற்றுக்கும் இதழ்கள் உண்டு.  செய்திகளுக்கென தனியாக.. விளையாட்டுக்கு.. காதலுக்கு... இப்படியாக ஃபேஷன் (Fashion) க்காக உலகம் முழுவதும் எண்ணற்ற இதழ்கள் வெளியாகின்றன. அதில் 124 வருடங்களாக வெளிவரும் Vogue இதழ் மிக முக்கியமானது. இதோ இதழில் பிரெஞ்சு பதிப்பு.. நூறு வருடங்களை தொடவிருக்கிறது. 
 
உலகிற்கு புதிய ஆடைகளை, வடிவங்களை புதிய ஃபேஷன்கள் அறிமுகம் செய்வது பிரான்ஸ் தான். குறிப்பாக பரிஸ். Paris Fashion Week உலகின் தலையாய ஃபேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று. அது இருக்கட்டும்... முழுக்க முழுக்க Fashionக்காக வெளியிடப்படும் Vogue இதழில் பரிஸ் பதிப்பு குறித்து பார்க்கலாம். 
 
1892 ஆம் ஆண்டு Vogue மாத இதழ் முதன்முறையாக அமெரிக்காவில் வெளியாக தொடங்கியது.  1920 ஆம் ஆண்டு அது 'பரிஸ்' பதிப்பாக பிரெஞ்சில் தலைகாட்டத்தொடங்கியது. மாதா மாதம் பிரெஞ்சு தேசத்துக்கு புதிய புதிய வடிவங்களிலான ஆடைகள், நகைகள் என பலவற்றை அறிமுகம் செய்ய... விற்பனை 'டாப் கியரில்' பறந்தது..! 
 
ELLE பத்திரிகையில் பணிபுரிந்த Edmonde Charles-Roux இந்த இதழில் 1954 ஆம் ஆண்டு பணிபுரிய துவங்கினார். அந்த சமயத்தில் மேலும் பல 'அப்டேட்'களை Vogue இதழ் கண்டது. 
 
பின்னர், வெவ்வேறு கட்டங்களில் பல ஆசிரியர்கள் குழாம் பணியாற்றி.. வளர்ச்சிப்பாதையின் பயணித்தது. வெற்றிகரமாக 1920 ஆம் ஆண்டு பிரெஞ்சு பதிப்பு ஆரம்பித்து வரும் 2020 ஆம் ஆண்டுடன் 100 வருடங்கள் தொட இருக்கிறது. இவ் இதழுக்கு எமது வாழ்த்துக்கள்..!
 
அட.. சொல்ல மறந்துவிட்டோமே... கடந்த 2013 ஆம் ஆண்டில் பன்னிரண்டு இலட்சம் பதிப்புகள் விற்றுத்தீர்ந்ததாம் ஒரு இதழ்!! 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்