Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்

3 சித்திரை 2025 வியாழன் 01:24 | பார்வைகள் : 1848


ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நேரப்படி இன்று இரவு 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் கியூஷு தீவிலிருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜப்பானிய அரசாங்கம் 02.04.2025  (1) அறிக்கை ஒன்றை வெளியிட்டு எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியிருந்தது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8 முதல் 9 வரை பதிவாகலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு இருப்பதாகவும், சுமார் 300,000 உயிர்கள் இழக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (28) மியான்மரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் இதுவரை 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்