Paristamil Navigation Paristamil advert login

80 பேரின் ஆதார், பான்கார்டு பயன்படுத்தி ரூ.1 கோடி மோசடி; போலீசில் புகார்

80 பேரின் ஆதார், பான்கார்டு பயன்படுத்தி ரூ.1 கோடி மோசடி; போலீசில் புகார்

3 சித்திரை 2025 வியாழன் 12:43 | பார்வைகள் : 733


வாணியம்பாடி அருகே, 80 பெண்களின் ஆதார், பான்கார்டு பயன்படுத்தி, ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று, தலைமறைவான மகளிர் சுய உதவிக்குழு தலைவியை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்தவர் சுபா, 40, இவர், அதே பகுதியை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட பெண்களிடம், 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து, நடத்தி வருகிறார். அதற்காக, 80க்கும் மேற்பட்ட பெண்களின், ஆதார், பான் கார்டை சுதா பெற்று கொண்டார்.

அந்த கார்டுகளை பயன்படுத்தி, அவர்களுக்கே தெரியாமல், பல்வேறு தனியார் வங்கியில் மேலாளர் மற்றும் ஊழியர்கள் உதவியுடன், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று தலைமறைவானார். கடன் கொடுத்த வங்கி ஊழியர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, அளித்த பெண்களிடம், கடன் தொகையை திருப்பி செலுத்த சொல்லி தொந்தரவு செய்தனர்.

இதையடுத்து, வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில், 40க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று புகார் அளித்தனர். அதில், மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்த சுபா என்பவர், தங்களது ஆதார், மற்றும் பான்கார்டுகளை தவறாக பயன்படுத்தி தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூறி தெரிவித்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்