Paristamil Navigation Paristamil advert login

அந்தமான் பழங்குடியினர் பகுதியில் அத்துமீறி புகுந்த அமெரிக்கர் கைது

அந்தமான் பழங்குடியினர் பகுதியில் அத்துமீறி புகுந்த அமெரிக்கர் கைது

3 சித்திரை 2025 வியாழன் 14:45 | பார்வைகள் : 420


அந்தமான் நிக்கோபார் தீவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கரை சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர்.

அந்தமான் நிக்கோபார் தீவின் தெற்கு அந்தமான் பகுதியில் உள்ள தர்முக்லி தீவு அருகே ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்த தீவு பகுதியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட பிறர் அங்கு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் மைகைலோ விக்டோர்விச் போலியாகாவ், 24, என்ற அமெரிக்கர் கடந்த மாதம் 27ல் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயருக்கு வந்தார். அங்குள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அவர், மார்ச் 29 அதிகாலையில் அங்குள்ள குரமந்தே தீவுக்கு ஒற்றை இருக்கைகொண்ட ரப்பர் படகில் சென்றார்.


அவரை பார்த்த பழங்குடியினர் அதிர்ச்சியடைந்து சி.ஐ.டி., போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து போலியோகோவை கைது செய்தனர்.

இது குறித்து டி.ஜி.பி.,தாலிவால் கூறியதாவது: அமெரிக்கர் போலியோகாவ் பழங்குடியினர் பகுதிக்கு அத்துமீறி சென்றது ஏன் என விசாரிக்கப்படுகிறது, அவர் போர்ட்பிளேயரில் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்த தீவுக்கு அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இருமுறை பயணம் செய்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்