”பிரான்சில் ஜனநாயகம் சீர்குலைந்து வருகிறது!” - கருத்துக்கணிப்பு!!

3 சித்திரை 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1781
மரீன் லு பென்னுக்கு தகுதியின்மை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், “பிரான்சில் ஜனநாயகம் சீர்குலைந்து வருகிறது” என பிரெஞ்சு மக்கள் தெரிவித்துள்ளனர்.
CNEWS, JDD மற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த கருத்துக்கணிப்பில் “பிரான்சில் ஜனநாயகம் சிறப்பாக இருக்கிறதா..? நன்றாக செயற்படுகிறதா?” எனும் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் 61% சதவீதமானவர்கள் “பிழையாக செயற்படுகிறது” என தெரிவித்துள்ளனர். ஏனைய 39% சதவீதமானவர்கள் “நன்றாக செயற்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.
மரீன் லு பென் மீதான தீர்ப்புக்கு பின்னர் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தீர்ப்புக்கு எதிராக பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த கருத்து கணிப்பினை CSA நிறுவனம் ஏப்ரல் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் பங்கேற்றிருந்தனர்.