Paristamil Navigation Paristamil advert login

குளிர்சாதனப்பெட்டியில் கணவரின் சடலம்! - மடாலயத்துக்கு சென்றதாக தெரிவித்துவந்த மனைவி கைது!!

குளிர்சாதனப்பெட்டியில் கணவரின் சடலம்!  - மடாலயத்துக்கு சென்றதாக தெரிவித்துவந்த மனைவி கைது!!

3 சித்திரை 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 2577


'மடாலயம் சென்றுள்ளதாக' ஊர்மக்களுக்கு நம்பவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டு குளிர்சாதனப்பெட்டி ஒன்றில்  மறைத்துவைக்கப்பட்டிருந்த சம்பவம் தென்மேற்கு பகுதி ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dordogne எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் இவ்வார செவ்வாய்க்கிழமை 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.  அவரது கணவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது மனைவி 'கணவர் மதவழிபாட்டுக்காக மடாலயம்' சென்றுள்ளார் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். 

ஐந்தாறு ஆண்டுகள் அவர் தொடர்பில் தகவல்கள் இல்லை என்பதால், அந்நகரத்தலைவர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அதை அடுத்து ஏப்ரல் 1 ஆம் திகதி அவரது வீடு சோதனையிடப்பட்டது. 

அதன்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன. உண்மையில், அப்பெண் அவரது கணவரை 2019 ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சடலத்தை வீட்டின் பின் பக்கமாக உள்ள கராஜ் ஒன்றில் வைத்திருந்த குளிர்சாதனப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டபோது அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்