Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா : பிரெஞ்சு மதுபான உற்பத்தியாளர்களுக்கு €800 மில்லியன் இழப்பு!!

அமெரிக்கா : பிரெஞ்சு மதுபான உற்பத்தியாளர்களுக்கு €800 மில்லியன் இழப்பு!!

3 சித்திரை 2025 வியாழன் 08:20 | பார்வைகள் : 1310


உலக நாடுகளுக்கான சுங்கவரியை அமெரிக்கா அதிகரித்துள்ளது. ஐரோப்பாவுக்கு 20% சதவீதத்தால் வரியை அதிகரித்துள்ளது.

பிரான்சில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட மதுபானங்கள் இந்த வரி அதிகரிப்பினால் பாதிக்கப்படும் எனவும், மதுபான உற்பத்தியாளர்களுக்கு €800 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மது உற்பத்திகான பொது அமைப்பு (Fédération française des exportateurs de vins et spiritueux - FEVS) இத்தகவலை வெளியிட்டுள்ளது. ""பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வைன் மற்றும் மதுபானத் துறைக்கு மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் - மேலும் அமெரிக்க இறக்குமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மீதும் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்." என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்