IPL வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த RCB

3 சித்திரை 2025 வியாழன் 09:06 | பார்வைகள் : 253
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 14வது ஐபிஎல் லீக் போட்டியில், பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 169 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூரு சார்பில், அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 54 ஓட்டங்கள் குவித்தார். குஜராத் தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 170 ஓட்டங்கள் குவித்து, அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 பந்துகளில், 73 ஓட்டங்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.