Paristamil Navigation Paristamil advert login

2 தங்கச் சுரங்கங்கள் புதிதாக கண்டுபிடிப்பு.... எந்த நாட்டில் தெரியுமா?

2 தங்கச் சுரங்கங்கள் புதிதாக கண்டுபிடிப்பு.... எந்த நாட்டில் தெரியுமா?

3 சித்திரை 2025 வியாழன் 11:55 | பார்வைகள் : 412


2 தங்கச் சுரங்கங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

உலக அளவில் தங்கத்தில் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வசதி குறைந்தவரோ அல்லது பணக்காரரோ வீட்டில் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் தங்கம் தான் முன்னிலை வகிக்கிறது.

ஆனால், தங்க விலை உயர்வை பார்த்து ஏழை மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஒரு சவரன் தங்க விலை ரூ.70 ஆயிரத்தை கடந்து ராக்கெட் வேகத்தில் செல்கிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் 2 புதிய தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பல ஆண்டுகளாக தங்கச் சுரங்கத்தை கண்டறியும் ஆய்வை சீனா நடத்தி வந்தது.

இந்த ஆய்வானது அதிநவீன 3டி ஜியாலஜிக்கல் மானிட்டரிங் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்டது.

கடந்த 2024-ம் ஆண்டில் ஹூனான் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் 1000 டன் அளவுக்கு தங்கம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் லியோனிங் மாகாணத்தில் 1000 டன் அளவுக்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சீன பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் தங்க ஆர்வலர்கள் மத்தியிலும், உலக அளவிலும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தென்னாப்பிரிக்காவின் ‘சவுத்டீப் கோல்டு மைன்’ சுரங்கம் தான் தங்கம் உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய சுரங்கம் ஆகும்.

ஆனால், தற்போது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சுரங்கங்களும் அதை விட பெரியது என்று சொல்லப்படுகிறது. அதில் ஹூனான் தங்கச் சுரங்கத்தின் மதிப்பு 83 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம் கோடிக்கும் அதிகம்) என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) நடத்திய பல்வேறு கட்ட சோதனையில் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்