Paristamil Navigation Paristamil advert login

Pitié-Salpêtrière மருத்துவமனை! - தோற்றமும் வரலாறும்!!

Pitié-Salpêtrière மருத்துவமனை! - தோற்றமும் வரலாறும்!!

12 தை 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 19225


உலகில் மருத்துவத்துறை பாரிய வளர்ச்சியை கண்டுள்ளதற்கு பிரெஞ்சு மருத்துவத்துறையும் முக்கிய காரணமாகும்.  பல பிரசித்தம் பெற்ற மருத்துவர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். இது தவிர உயரிய தொழில்நுட்ப மருத்துவம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இங்கு உள்ளன. இதோ... இன்று பரிசில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனை குறித்து பார்கலாம்!!
 
இந்த மருத்துவ மனை 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றால் நம்புவதற்கு கஷ்ட்டம் தான்.  உண்மைதான் 1656 ஆம் ஆண்டு  XIV ஆம் லூயி மன்னனால் கட்டப்பட்டது தான் இந்த மருத்துவமனை. அப்போது தான் மருத்துவத்துறை ஓரளவு வளர்ச்சியை அடைய ஆரம்பித்திருந்தது. பின்னர் 1684 ஆம் ஆண்டு மருத்துவமனை விஸ்தரிக்கப்பட்டது. 
 
அப்போதெல்லாம்.. உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டார்கள். இது தவிர, விலைமாது பெண்களை கைதுசெய்துகொண்டு வந்து இங்கு சிறைவைத்தார்கள்.
 
பிரெஞ்சு புரட்சியின் போது இந்த மருத்துவமனை உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக இருந்தது. அப்போது 10,000 நோயாளிகள், 300 சிறைக்கைதிகள் (அவர்களும் நோயாளிகளே) இங்கு சிகிச்சை பெற்றார்கள். 
 
பிரான்சின் முதல் மனநல மருத்துவர் என அறியப்பட்ட Philippe Pinel இங்கு கடமையாற்றினார். 1745 இல் பிறந்த இவர், Pitié-Salpêtrière மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர்களை முதன்முறையாக சிகிச்சை அளித்தார். பலருக்கு சிகிச்சை கைகூடியது. 
 
தற்போது ஐரோப்பாவில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. 1603 நோயாளிகள் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு மருத்துவமனை உள்ளது. மேலும் அனைத்து நோய்களுக்குமான அதிசிறந்த மருத்துவசேவையும் இங்கு உள்ளது. 
 
உங்களை மருத்துவமனைக்கு அனுப்பும் நோக்கம் எங்களுக்கு இல்லையென்றாலும்... முகவரியை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!!  47-83 Boulevard de l'Hôpital, 75013 Paris, France,  +33 1 42 16 00 00
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்