அருண் விஜய் படத்தில் இணைந்த தனுஷ்..!

3 சித்திரை 2025 வியாழன் 13:42 | பார்வைகள் : 519
தனுஷின் "இட்லி கடை" திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருக்கிறார். இந்நிலையில், அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தில் தனுஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடித்து இயக்கியுள்ள "இட்லி கடை" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள நிலையில், அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார். "என்னை அறிந்தால்" படத்திற்கு பின், ஒரு அட்டகாசமான வில்லன் கதாபாத்திரம் அருண் விஜய்க்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், "திருச்சிற்றம்பலம்" படத்திற்குப் பிறகு, தனுஷ் மற்றும் நித்யா மேனன் மீண்டும் இணைந்திருப்பதுடன், இந்த படத்தை தனுஷே இயக்கியிருப்பதும், இப்படத்தின் சிறப்பம்சங்களாகும்.
இந்நிலையில், தனுஷின் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருக்கும் நிலையில், அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கும் "ரெட்டை தல" என்ற திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் பாடி இருப்பதாகவும், இந்த பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்திருக்கும் இந்த படத்தில், இன்னொரு நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படம், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.