‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது?

3 சித்திரை 2025 வியாழன் 13:48 | பார்வைகள் : 181
சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் தற்போது வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்த படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படமானது நடிகர் விக்ரமின் 63 வது படமாகும். அதன்படி தற்காலிகமாக சியான் 63 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
அதைத்தொடர்ந்து இப்படத்தில் யோகி பாபு, சாய்பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது மேலும் இந்த படத்திற்கு வீரமே ஜெயம் என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் அல்லது ரஜினியின் பழைய பட டைட்டிலை வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.