Paristamil Navigation Paristamil advert login

மீன் கோலா உருண்டை

மீன் கோலா உருண்டை

3 சித்திரை 2025 வியாழன் 13:53 | பார்வைகள் : 119


ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு அசத்தலான மொறுமொறு சுவையில் மீன் உருண்டை மசாலா "மீன் கோலா உருண்டை" எப்படி செய்வது என்று இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:  மீன் சதை ஒரு கிலோ, பெரிய வெங்காயம் ஒரு கிலோ, உருளைக்கிழங்கு 500 கிராம், இஞ்சி 50 கிராம், பூண்டு 50 கிராம், மிளகாய் 50 கிராம், எண்ணெய் ஒரு லிட்டர், கறி மசாலா பவுடர் 50 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், உப்பு தேவையான அளவு, அரிசி மாவு 250 கிராம், வத்தல் தூள் 50 கிராம்.

செய்முறை: நீராவியில் வேகவைத்து முள் நீக்கப்பட்ட மீனின் சதையை பிரித்து எடுக்க வேண்டும் பின் தோலை நீக்கி இஞ்சி பூண்டு பெரிய வெங்காயம் மற்றும் சிறிது சிறிதாக நறுக்கிய மிளகாய் போன்றவற்றை ஒன்று சேர்த்து வானலில் எண்ணெய் ஊற்றி பொன் நிறத்தில் ஆகும் வரை வதக்க வேண்டும்.
.
இதன் பின் வேக வைத்த தோல் உரித்த உருளைக்கிழங்குடன் கறி மசாலா பவுடர், வத்தல் தூள் மஞ்சள்தூள் உப்பு, முட்டை, அரிசி, மாவு, போன்றவற்றுடன் இஞ்சி, பூண்டு விழுது ஆகியவை சேர்த்து கலக்க வேண்டும்.

அதன் பிறகு இந்த கலவையை வேகவைத்த மீனுடன் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும் ஓரம் நீக்கப்பட்ட ரொட்டித் துண்டுகளைக் கொண்டு உருண்டையின் இரு பக்கங்களையும் மூடவும். பிறகு ரஸ்க் பொடியில் இதை எடுத்து கொடியில் பிரட் எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுத்தால் மீன் மசாலா உருண்ட தயாராகி விடும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்