Paristamil Navigation Paristamil advert login

Emmanuel எனும் இராட்சத மணி!

Emmanuel எனும் இராட்சத மணி!

11 தை 2017 புதன் 11:30 | பார்வைகள் : 18381


பரிசுக்குள் இருக்கும் புதினங்கள் எல்லாம் சொல்லித்தீராது! இதோ பாருங்கள்... கோயில் மணி அடித்தால் கட்டிடமே அதிர்கிறது என மணி அடிப்பதை தவித்திருக்கிறார்கள். Notre Dame de Paris பெரும் தேவாலயத்தில் உள்ள ஒரு மணி! அதன் கதையை தெரிந்துகொள்ளலாம் வாங்க!! 
 
Notre Dame de Paris தேவாலயத்துக்கு மணிகள் வந்தது 1681 ஆம் ஆண்டு. இந்த தேவாலயத்தில் மொத்தம் பத்து இராட்சத மணிகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் 'ராஜா' Emmanuel எனும் இராட்சத மணி! மொத்தம் எடை 13 தொன். 'டாங்' என ஒரு அடி அடித்தால் நீண்ட நேரம் அதன் எதிரொலி அத்தேவாலயம் முழுவதும் சுழன்றுகொண்டிருக்குமாம். ஆரம்ப காலங்களில் மணியை அடிப்பதற்கென சிலர் பணியில் அமர்த்தப்பட்டார்களாம். பின்னர் அது மின்சார கருவிக்கு மாறியது. 261 cm உயரம் கொண்டது இந்த 
Emmanuel மணி!!
 
இத்தேவாலயத்தில், Emmanuel மணிக்கு (13271 கிலோகிராம்) அடுத்தபடியாக இருப்பது Marie எனும் மணியாகும். மொத்தம் 6023 கிலோகிராம். அதை தொடர்ந்து, Gabriel (4162 கிலோகிராம்), Anne Geneviève ( 3477 கிலோகிராம்) Denis - (2502 கிலோகிராம் ) ஆகிய மணிகள் உள்ளன. 
 
அதன் பின்னர், 
Marcel - 1925 kg
Étienne - 1494 kg 
Benoît Joseph - 1309 kg
Maurice - 1011 kg
Jean-Marie - 782 kg
 
ஆகிய மணிகளும் இங்கு உள்ளன. ஆனால் 12 ஆம் நூற்றாண்டுத் தேவாலயத்தில் இந்த மணிகளை அடிக்க நேர்ந்தால் கட்டிடம் இடிந்து விழுந்து விடும் என, மணி அடிப்பதையே நிறுத்திவிட்டார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்