■ அமெரிக்காவில் முதலீடு இல்லை.. - ஜனாதிபதி மக்ரோன் அதிரடி!

3 சித்திரை 2025 வியாழன் 16:51 | பார்வைகள் : 2298
உலக நாடுகள் முழுவதற்கும் அமெரிக்கா வரி அதிகரிப்பை அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பாவுக்கு 20% சதவீதமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் அவசர கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அதன்போது, 'பிரெஞ்சு நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலிடுவதை நிறுத்த வேண்டும்!" என வலியுறுத்தினார். இது ஒரு தற்காலிக நிறுத்தம் எனவும், 'தெளிவு' கிடைக்கும் வரை இது தொடரும் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த வரி அதிகரிப்பினால் பிரான்ஸ் பெருமளவில் பாதிக்கப்படும் எனவும், குறிப்பாக மதுபான ஏற்றுமதி பெரும் பின்னடைவைச் சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்து, இன்று மாலை 4 மணிக்கு எலிசே மாளிகையில் சிறப்பு சந்திப்பு இடம்பெற்றது. அதில் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, சில அமைச்சர்கள் மற்றும் வர்த்தக நிபுணர்கள், பொருளாதார அறிஞர்கள் பங்கேற்றனர்.