Paristamil Navigation Paristamil advert login

'வெள்ளைக்கொடி' வேந்தன்!! - வரலாற்றுப் பக்கம்!!

'வெள்ளைக்கொடி' வேந்தன்!! - வரலாற்றுப் பக்கம்!!

10 தை 2017 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 18594


நம் எல்லாரும் பிரெஞ்சுக் கொடி தெரியும். அதன் வரலாறும் தெரியும். அதன் மூன்று வர்ணங்களின் அர்த்தங்களும் தெரியும். பிரான்ஸ் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் பிரெஞ்சு கொடி வெவ்வேறு வர்ணங்களில், வடிவங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் ஒரு கால கட்டத்தில் பிரெஞ்சு கொடி 'வெள்ளை வெளேர்' என வெறும் வெள்ளையாக மாத்திரம் இருந்தது. எப்போதென தெரியுமா? 
 
தற்போதுள்ள மூவர்ண கொடி, முதலில் சரி சம அளவுகளில் இருந்தது...  மே 17, 1853 ஆம் ஆண்டு பின்னர் 30,33,37 ஆகிய வீதங்களாக பிரிக்கப்பட்டது . அதன் பின்னர் பிரெஞ்சு கொடியில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 
 
1814 ஆம் ஆண்டு.. 19 ஆம் ஆண்டின் தொடக்கம், பிரெஞ்சு கொடியில் ஒரு மாற்றம் வந்தது. அதுவரை  வெள்ளை பின்னனியில் மஞ்சள் நட்சத்திரங்கள் பதித்திருந்த பிரெஞ்சு கொடியில்... மஞ்சள் நட்சத்திரங்களை நீக்கிவிட்டு.. வெள்ளையாக விட்டுவிட்டார்கள். தனி வெள்ளை. ஒரு வேட்டித் துண்டை கிழித்து கொடியாக பயன்படுத்தலாம். இதுதான் பின்னர் பிரச்சனையாகவும் வெடித்தது. வெள்ளையாய் இருக்கும் ஒரு துணிக்கும்... பிரெஞ்சுக்கொடிக்கும் வித்தியாசம் இல்லையா... போன்ற சிந்தனைகள் உருவாக... இந்த வெள்ளைக்கொடி சகாப்த்தம் சில வருடங்கள் மாத்திரமே தாக்குபிடித்தது. 
 
15 வருடங்கள் கழித்து, 1830 ஆம் வருடம்.. இந்த வெள்ளைக்கொடி இரத்துச் செய்யப்பட்டு.. மீண்டும் அந்த நட்சத்திரங்கள் கொண்டுவரப்பட்டது. இம்முறை வேறு சில வடிவங்களும் சேர்க்கப்பட்டன. அதன் பின்னரும் சில பல மாற்றங்களை சந்தித்துத்தான் தற்போதைய பிரெஞ்சு கொடி உருவானது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்