அமெரிக்க வரிகள்: "பல்லாயிரக்கணக்கான வேலைகள் பறிபோகும் அபாயம்!!!

4 சித்திரை 2025 வெள்ளி 13:14 | பார்வைகள் : 1585
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரிகளால் "பல்லாயிரக்கணக்கான வேலைகள்" பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது என பிரதமர் பிரான்சுவா பேய்ரூ (François Bayrou) வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4 அன்று தெரிவித்தார். அமெரிக்கா நடத்தும் வர்த்தகப் போர் "மிகவும் ஆழமான மறுபரிசீலனை செய்ய நம்மை கட்டாயப் படுத்துகிறது" என்று பிரான்சுவா பேய்ரூ வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதியின் முடிவால் "அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பிரெஞ்சு உற்பத்தியும் உடனடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது" என்றும் பிரான்சுவா பேய்ரூ வருத்தம் தெரிவுத்துள்ளார் . மேலும், இந்த புதிய அமெரிக்க வரிகள் "அனைவருக்கும் ஒரு பேரழிவு" என்றும் , ஆனால் "முதலில் அமெரிக்கர்களை தாக்கும்" என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். அவர் ஏற்கனவே கூறியது போல் வியாழக்கிழமை " 2 முதல் 3% வரை பணவீக்கம்" கணிக்கப்பட்டுள்ளது.