Paristamil Navigation Paristamil advert login

ஏழு பிரதமர்களை கொண்ட ஜனாதிபதி!!

ஏழு பிரதமர்களை கொண்ட ஜனாதிபதி!!

13 ஆடி 2017 வியாழன் 13:32 | பார்வைகள் : 18968


பிரெஞ்சு புதினத்தில் இன்று ஜனாதிபதி François Mitterrand குறித்த சில ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்!!
 
François Mitterrand என குறிப்பிட்டாலும், இவரின் முழுப்பெயர் François Maurice Adrien Marie Mitterrand ஆகும். ஒக்டோபர் 26, 1916 ஆம் ஆண்டில் பிறந்துள்ளார். கடந்த வருடம் இவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 
 
பிரான்சின் Jarnac நகரில் பிறந்த இவர், அரசியலில் காணாத கரை இல்லை எனலாம். உள்ளூர் கவுன்சிலராக இருந்து, கடல் கடந்த மாவட்டங்களுக்கான அமைச்சராக இருந்து, உள்துறை அமைச்சராக இருந்து, நீதித்துறை அமைச்சர்... நாட்டின் ஜனாதிபதி என பிரெஞ்சு அரசியல் துறையில் இவரின் பெயர் எப்போதும் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டவையாகும்!!
 
சோசலிச கட்சி சார்பாக போட்டியிட்டு, மே 21, 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக எலிசேயில் கால் பதித்தார். எலிசேயில் இருக்க அவருக்கு பிடித்ததோ இல்லையோ... எலிசேயில் அவர் இருப்பது பிரெஞ்சு மக்களுக்கு நன்றாக பிடித்துவிட்டது. அடுத்து வந்த 14 வருடங்கள் அவரை ஜனாதிபதியாக நீடிக்கச் செய்து அழகு பார்த்தனர் பிரெஞ்சு மக்கள். ஐந்தாம் குடியரசின் முதல் இடதுசாரி கட்சி ஜனாதிபதியாகவும், அதிக காலம் ஜனாதிபதியாக நீடித்த பெருமையும் Mitterrand ஐயே சாரும்!!
 
இவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மொத்தம் ஏழு பேர் பிரதமராக வெவ்வேறு காலப்பகுதியில் இருந்தார்கள். Pierre Mauroy
Laurent Fabius
Jacques Chirac
Michel Rocard
Édith Cresson
Pierre Bérégovoy
Édouard Balladur
 
என்ற இந்த ஏழு பேர் கொண்ட பட்டியலில் Jacques Chirac பின்நாட்களில் Mitterrand ஐ தொடர்ந்து ஜனாதிபதியாக வந்தார். 
 
இவர் ஒரு இராணுவ வீரர் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்கும். பிரெஞ்சு இராணுவத்தில் 1939 ஆம் ஆண்டில் இருந்து 1941 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்