மிசிசாகாவில் வாகனம் மோதி 70 வயது மூதாட்டி உயிரிழப்பு!
4 பங்குனி 2025 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 5161
மிசிசாகாவில் (Mississauga) வெள்ளிக்கிழமை மாலை வாகனமொன்று மோதி 70 வயதிற்கும் மேற்பட்ட மூதாட்டி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லேக்ஷோர் ரோடு வெஸ்ட் மற்றும் வால்டன் சர்கிள் (Lakeshore Road West & Walden Circle) சந்திப்பில், சவுத் டவுன் வீதிக்கு (Southdown Road) கிழக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இருவர் மோதி காயமடைந்த நிலையில், காயமடைந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
மற்றொரு பெண்மணி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இருந்தார், என பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police - PRP) தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது. யார் குற்றவாளி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் எங்களிடம் இல்லை," என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய விபத்து விசாரணைப் பிரிவு (Major Collision Bureau) இந்த விபத்தை தொடர்ந்து விசாரித்து வருகின்றது.


























Bons Plans
Annuaire
Scan