பரிஸ் : கத்திக்குத்தில் முடிந்த குழு மோதல்.. ஒருவர் படுகாயம்!!
.jpg)
4 பங்குனி 2025 செவ்வாய் 10:31 | பார்வைகள் : 1381
பரிசில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தடையும் முன்னர் தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.