Paristamil Navigation Paristamil advert login

கிழக்கில் உருவாகியுள்ள அடிப்படைவாத அமைப்பு தொடர்பில் விசேட அவதானம்!

கிழக்கில் உருவாகியுள்ள அடிப்படைவாத அமைப்பு தொடர்பில் விசேட அவதானம்!

4 பங்குனி 2025 செவ்வாய் 10:39 | பார்வைகள் : 193


கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள அடிப்படைவாத அமைப்பு ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவு தகவல்களை திரட்டி வருவதாகக் கூறினார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அத்தகைய குழு ஒன்று தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது. அதைப் பற்றி உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றன. ஜனாதிபதியும் பாதுகாப்பு பிரிவின் செலவுத் தலைப்புக்கு வந்து சில விடயங்களைச் சுட்டிக்காட்டினார். தற்போது எங்களால் கூற முடிவது, பாதுகாப்பு பிரிவு இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் உள்ளன என்பதுதான்.”

வர்த்தக‌ விளம்பரங்கள்