நோர்து-டேம் நன்கொடையாளர்களுக்கு குலுக்கல் முறையில் 'பரிசு'!!

4 பங்குனி 2025 செவ்வாய் 10:48 | பார்வைகள் : 1509
தீ விபத்தில் சேதமடைந்த நோர்து-டேம் தேவாலயத்தை உலகம் முழுவதிலும் இருந்து நன்கொடையாளர்கள் நிதி வழங்கி மீள புதுப்பித்திருந்தனர். அவர்களுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் 'பரிசு' ஒன்று காத்திருக்கிறது.
நோர்து-டேம் சிதைவில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய கற்களே இவ்வாறு வழங்கப்பட உள்ளன. €40 யூரோக்களுக்கு மேற்கொண்ட தொகையை நன்கொடையாக வழங்கிய அனைவரது பெயர்களும் இதில் கலந்துகொள்ளலாம். அவர்களில் 50 பேருக்கு இந்த கற்கள் வழங்கப்பட உள்ளன.
சதுர வடிவிலான இந்த சிறிய கற்களை பெற விரும்புவோர்கள், தங்களது பெயர் விபரங்களை வரும் ஏப்ரல் 4, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 111.59 மணிக்கு முன்னதாக இணையமூடாக பதிவு செய்யவேண்டும். அதற்கு நீங்கள் நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகளுக்காக €40 யூரோக்களுக்கு மேற்பட்ட தொகையை வழங்கிய நன்கொடையாளர்களாக இருப்பது அவசியம்.
குலுக்கல் ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமை குலுக்கல் இடம்பெற்று அதிஷ்ட்டசாலிகள் அறிவிக்கப்படுவார்கள்.