'சுழல் 2' நடிகையின் அதிர்ச்சி புகார்..!

4 பங்குனி 2025 செவ்வாய் 11:04 | பார்வைகள் : 192
அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான 'சுழல் 2’ என்ற வெப் தொடரில் நடித்துள்ள நடிகை, பிரபல இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ’சுழல்’ வெப் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது, அதன் இரண்டாவது சீசன் அமேசான் பிரைமில் வெளியானதுடன், நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில், தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஸ்வினி, பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’கிழக்கு சீமையிலே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "படப்பிடிப்புக்கு ஒரு நாள் என் அம்மா இல்லாமல் சென்றபோது, ஒரு பிரபல இயக்குனர் என்னை மேலே கூப்பிடுகிறார்' என்று கூறினார்கள். அப்போது நான் சிறு வயதாக இருந்ததால் எதையும் தவறாக நினைக்கவில்லை. மேலே சென்றபோது, அவர் 'உள்ளே வா' என்று கூப்பிட்டார். நானும் யோசிக்காமல் உள்ளே சென்றபோது தான், அந்த இயக்குனர் என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார். கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உடனே அங்கிருந்து கீழே வந்து, வீட்டிற்கு வந்து விட்டேன்.
என் அப்பா வயது உடைய அந்த இயக்குனர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை,"* என்று கூறினார்.அந்த இயக்குனர் யார் என்பதை அஸ்வினி வெளிப்படையாக சொல்லவில்லை. இருந்தாலும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவர் யாராக இருக்கலாம் என்று விவாதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.