உக்ரேன் : ஆயுத உதவியை நிறுத்திய அமெரிக்கா.. அவசர சந்திப்பில் மக்ரோன்!!

4 பங்குனி 2025 செவ்வாய் 13:42 | பார்வைகள் : 11399
உக்ரேனுக்கு சலக வித ஆயுத உதவியை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதை அடுத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவசர சந்திப்பு ஒன்றில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Sébastien Lecornu, வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot, ஐரோப்பாவிற்கான அமைச்சர் பிரதிநிதி Benjamin Haddad என பலர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.
இன்று மார்ச் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இந்த சந்திப்பு எலிசே மாளிகையில் இடம்பெற உள்ளது.
கிட்டத்தட்ட அமெரிக்காவால் கைவிடப்பட்ட நிலையில் உக்ரேன் இருப்பதாகவும், அடுத்த 48 மணிநேரத்தில் ஐரோப்பிய கவுன்சில் மாநாடு இடம்பெற உள்ளதாகவும் அதற்குள்ளாக பிரான்ஸ் ஒரு நிலைப்பாட்டை எட்டவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இந்த சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.