Paristamil Navigation Paristamil advert login

Vitry-sur-Seine : கத்திக்குத்தில் ஒருவர் பலி.. ஒருவர் காயம்...!!

Vitry-sur-Seine : கத்திக்குத்தில் ஒருவர் பலி.. ஒருவர் காயம்...!!

4 பங்குனி 2025 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 499


நடுவீதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vitry-sur-Seine (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று மார்ச் 3, திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பிரபலமான Avenue de l'Abbé Roger-Derry வீதிக்கு அருகே உள்ள Place de la Galerie பகுதியில், மாலை 5.40 மணி அளவில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தடைந்த போது நிலமை கைமீறிச் சென்றிருந்தது.

இரு நபர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வீதியின் அருகே கிடந்துள்ளனர். அவர்களை உடனடியாக மருத்துவக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அவர்களில் ஒருவர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலாளிகள் இருவர் ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 94 ஆவது மாவட்ட காவல்துறையினர் (SDPJ 94) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்