பிரெஞ்சு துறைமுகத்தினை வந்தடைந்த 10 தொன் கொக்கைன்!!

4 பங்குனி 2025 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 744
பிரான்சின் வடக்குப் பகுதியான Dunkerque (Nord) துறைமுகத்தில் கிட்டத்தட்ட 10 தொன் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்ற வார இறுதியில் இந்த பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் இது ஒரு மிகப்பெரும் பாய்ச்சல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கொக்கைனின் பெறுமதி 32,000 யூரோக்கள் எனவும், கைப்பற்றப்பட்ட மொத்த கொக்கைனின் பெறுமதி 320 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடும் JUNALCO அமைப்பு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சென்ற டிசம்பரில் Le Havre துறைமுகம் வழியாக நாட்டுக்குள் நுழைந்த 2 தொன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.