தமிழகத்தில் மத மாற்றம் அதிகம்: ஹிந்து முன்னணி தலைவர் வருத்தம்
5 பங்குனி 2025 புதன் 03:16 | பார்வைகள் : 3871
தமிழகம் முழுதும் மதமாற்றம் அதிகமாக உள்ளது,” என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
ஹிந்து முன்னணியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் முழுநேர ஊழியர் சந்திப்பு கூட்டம், ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற காடேஸ்வரா சுப்பிரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் பிரச்னைக்குப் பின், ஹிந்துக்கள் மத்தியில் எழுச்சி உருவாகியுள்ளது. மதுரையில், வரும் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில், ஐந்து லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகம் முழுதும் மதமாற்றம் அதிகமாக உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில், மதமாற்றம் நடப்பதை தடுக்க வேண்டும். இன்றைய அரசு, மதமாற்றத்தை ஊக்குவிப்போருக்கு சாதகமாக உள்ளது.
ஏராளமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதாக, அறநிலையத் துறை அமைச்சர் சொல்லி வருகிறார். ஆனால், அந்த கோவில்களில் எவ்வளவு வருவாய் கிடைக்கிறது, எவ்வளவு செலவு செய்கின்றனர் என்பதற்கான வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
அவிநாசி தாலுகா பெருமாநல்லுாரில் உள்ள கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த, உள்ளூர் அதிகாரிகள் அனுமதி வழங்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan