Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.வின் நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பது அல்ல! முதல்வர் ஸ்டாலின்!

தி.மு.க.வின் நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பது அல்ல! முதல்வர் ஸ்டாலின்!

5 பங்குனி 2025 புதன் 12:33 | பார்வைகள் : 149


தி.மு.க.வின் நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பதல்ல. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு சமமான அங்கீகாரம் வேண்டும் என்பது தான்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது கடிதம்:

ஹிந்தி நம் நாட்டின் தேசிய மொழி. அதனை யாரும் புறக்கணிக்கக் கூடாது என பா.ஜ.,வினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் அலுவல் மொழிதான் ஹிந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. ஹிந்தி தான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது. இந்திய ஒன்றியம் என்பதே பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களைக் கொண்டதாகும். மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி ஆட்சி மொழியாக உள்ளது.

இதுவே நோக்கம்!

தி.மு.க.வின் நோக்கம் ஹிந்தியை எதிர்ப்பதல்ல, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு சமமான அங்கீகாரம் வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இந்தியாவின் தேசிய மொழிகள் தான். ஹிந்தி மட்டுமே தேசிய மொழி என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு. சமஸ்கிருதமே இந்தியாவின் மூல மொழி என்பது நம்மை அடிமையாக்கும் முயற்சி. மூலமொழி என்றால் அதிலிருந்து தான் மற்ற மொழிகள் தோன்ற முடியும்.

எவ்வளவு நீதி?

தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத் தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பா.ஜ., வினர் தங்கள் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? என்ற வேறு பாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும். 10 ஆண்டு காலகட்டத்தில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,435 கோடி.

உலக சரித்திரம்

இதே காலகட்டத்தில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே. தமிழகத்துக்குரிய நிதியைத் தராமல் வஞ்சிப்பது போலவே தமிழுக்குரிய நிதியையும் ஒதுக்காமல் மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது. மொழித்திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்