● இல்-து-பிரான்ஸ் : அவதானம்..!! - இன்று வீதிகளுக்கு வேகக்கட்டுப்பாடு!!

5 பங்குனி 2025 புதன் 06:00 | பார்வைகள் : 4070
இன்று மார்ச் 5, புதன்கிழமை இல்-து-பிரான்ஸ் வீதிகளுக்கு வேகக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பரிஸ் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
ஒவ்வொரு வீதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச வேகத்தில் இருந்து 20 கி.மீ குறைக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு 130 கி.மீ அதிகபட்ச வேகம் கொண்ட சாலைகள் 110 கி.மீ வேகமாக குறைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 5.30 மணியில் இருந்து இன்று இரவு 9 மணி வரை இந்த வேகக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்.
இந்த வேகக்கட்டுப்பாடு ஏலவே 50 கி.மீ வேகமாக உள்ள சுற்றுவட்ட வீதிக்கு (périphérique) பொருந்தாது.
இல்-து-பிரான்சுக்குள் வளிமண்டல மாசடைவு அதிகரித்ததை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்தோடு மேலும் சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
வெப்பமூட்டிக்கான மரக்கட்டைகளை எரிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.
முடிந்தவரை பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகுபவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் நடைபயிற்சியிலோ, விளையாட்டுக்களிலோ ஈடுபடவேண்டாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.