● ஜனாதிபதி மக்ரோன் இன்று விசேட உரை!!

5 பங்குனி 2025 புதன் 09:00 | பார்வைகள் : 2100
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். உக்ரேன் யுத்தம் தொடர்பில் இந்த உரை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் 5, புதன்கிழமை மாலை 8 மணிக்கு இந்த உரை தொலைக்காட்சி வழியாக இடம்பெறும் என ஜனாதிபதி மக்ரோன் தனது X சமூகவலைத்தளமூடாக அறிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எலிசே மாளிகையில் தனது அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தார். அதில் உக்ரேன் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. அதை அடுத்தே இன்று இந்த உரையை நிகழ்த்த உள்ளார்.
”நிலையற்ற தன்மையை கொண்டுள்ள இந்த உலகம், பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. நான் இன்று மாலை 8.00 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளேன்” என அவர் தெரிவித்தார்.