உலகில் எந்தவொரு அணித்தலைவரும் இதுவரை செய்யாத சாதனை! என்ன தெரியுமா?

5 பங்குனி 2025 புதன் 08:20 | பார்வைகள் : 240
இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா உலகில் எந்தவொரு அணித்தலைவரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இதற்கான இறுதிப்போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் வெற்றி பெரும் அணி, இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.
இந்த தொடரில், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம், அணித்தலைவராக ரோஹித் ஷர்மா எந்த அணியின் தலைவரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 4 தொடர்களை ஐசிசி நடத்தி வருகிறது. இந்த 4 தொடர்களின் இறுதிப்போட்டிக்கும் அணியை அழைத்து சென்ற ஒரே அணித்தலைவர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பையின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றது. ஆனால் இறுதிப்போட்டியில் வெற்றிபெறவில்லை.
தொடர்ந்து, கடந்து ஆண்டு நடைபெற்ற 20ஓவர் உலகக்கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றதோடு, அதில் வெற்றி பெற்று கோப்பையையும் வென்றது.
அதே போல், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இதிலும் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.